ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!

ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறது. வங்கி சேவைகள் முதல் கார், பைக் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2024, 07:32 AM IST
  • ஆதார் மூலம் கடன் பெற்று கொள்ளலாம்.
  • இதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகிறது.
  • வங்கிகள் மூலம் கடன் பெற்று கொள்ளலாம்.
ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்! title=

கடன் வாங்க தற்போது பல விருப்பம் உள்ளது. அரசு வங்கி, தனியார் வங்கி, கடன் வழங்கும் ஆப்ஸ்கள், கிரெடிட் கார்ட் என பல வகைகளில் பெற முடியும். உங்கள் ஆதார் அட்டையின் உதவியுடன் தனிநபர் கடனைப் பெற்று கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆதார் அட்டையில் கடன் வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனி தனி ஆதார் கார்ட் உள்ளது. நிலம் வாங்குவதில் இருந்து தங்கம் வாங்குவது வரை ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை மூலம் ரூ.10 அல்லது ரூ.20 ஆயிரம் மட்டும் அல்ல, ரூ.50 ஆயிரம் வரை கடன் பெறலாம். 

ஆதார் அட்டையில் கடன் வாங்குவது எப்படி?

ஆதார் அட்டை மூலம் கடனுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும், அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிக்கும் நபரின் CIBIL மதிப்பெண் 750 அல்லது அதற்கு மேல் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதே போல மாத சம்பளம் பெறுபவராக இருந்தால் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ. 15,000/- ஆக இருக்க வேண்டும். முக்கியமாக ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக கடனுக்கு விண்ணப்பிப்பவர் மீது எந்தவித சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் இருக்க கூடாது. 

மேலும் படிக்க | சம்மரில் குளு குளு ஆப்பர்... பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடி

கடன் வாங்க என்ன என்ன ஆவணங்கள் தேவை?

ஆதார் அட்டை, கைபேசி எண், பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற அடிப்படை ஆவணங்கள் தேவை. ஆதார் அட்டை மூலம் பெறப்படும் கடனுக்கு தனிநபர் கடனுக்கு செலுத்தும் அதே வட்டி விகிதத்தை செலுத்த வேண்டும். பொதுவாக, இந்த வட்டி விகிதம் 10.50 சதவிகிதம் முதல் 14 சதவிகிதம் வரை இருக்கலாம். நீங்கள் எங்கு கடன் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்த வட்டி விகிதம் மாறுபடும். 

ஆதார் அட்டை மூலம் கடன் பெறுவது எப்படி?

இதற்கு முதலில் குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தனிநபர் கடன் பிரிவை தேர்வு செய்யவும்.  இதற்குப் பிறகு, உங்கள் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, ஆதார் எண், பான் கார்டு மற்றும் பிற விவரங்களை குறிப்பிட வேண்டும். அனைத்து விவரங்களையும் பதிவிட்ட பிறகு, கடன் தொகை மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பிறகு சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் ஆவணங்கள் மற்றும் தகுதியை சரிபார்க்கும். நீங்கள் கடனுக்கு தகுதியுள்ளவர் என்றால் உங்கள் கடன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். வங்கியின் முழு செயல்முறைக்குப் பிறகு கடன் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மேலும் படிக்க | இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News