கோலார் நகர்... விக்ரம் - ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் இதுவா?

விக்ரமும், பா.இரஞ்சித்தும் இணையும் படம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 22, 2022, 07:25 PM IST
  • விக்ரமும், பா. இரஞ்சித்தும் இணைந்திருக்கிறார்கள்
  • ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்
  • படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது
 கோலார் நகர்... விக்ரம் - ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் இதுவா? title=

சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் கோப்ரா படுதோல்வியடைந்தது. பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனையடுத்து அவர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் படம் உருவாக இருக்கிறது. இதற்கான லொக்கேஷன் தேடும் பணியில் பா.இரஞ்சித் தனது உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டிருந்தார். அந்தப் பணி முடிந்தவுடன் சமீபத்தில் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது.

அந்தப் பூஜையில் விக்ரம், பா.இரஞ்சித், ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இரஞ்சித்துடன் இணைந்து எழுத்தாளர் தமிழ்ப்பிரபா திரைக்கதை எழுதுகிறார். முதல்முறையாக இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி சியான் 61 படம் பான் இந்தியா படமாக வெளியாகுமென்று தகவல் வெளியான சூழலில், பான்  இந்தியா என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது என இரஞ்சித் கூறியிருந்தார். இதற்கிடையே இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவை இரஞ்சித் நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் - பா.இரஞ்சித் படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சியான் 61 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு கில்லர் ரைடாக இருக்கப்போகிறது. இசையை பொறுத்தவரை மிகவும் சுவாரஸ்யமான கதை” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் டெஸ்ட் ஷூட் தற்போது நடந்துவருவதாகவும், விரைவில் படக்குழு ஷூட்டிங்குக்கு செல்லவிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்துக்கு கோலார் நகர் என பெயர் வைக்கப்படலாம் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத சூழலில் இதுதொடர்பான அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News