கார்த்திகை தீபம்: தீபாவுக்கு ஊட்டி விட்டு அழகு பார்த்த கார்த்திக்.. மீனாட்சிக்காக எடுத்த முடிவு!

Zee Tamil Karthigai Deepam Today's Episode Update: தீபாவுக்கு ஊட்டி விட்டு அழகு பார்த்த கார்த்திக்.. மீனாட்சிக்காக எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2024, 02:19 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • கார்த்திக் தீபாவின் காதில் எல்லாரும் லவ்வர்ஸ் என்ற விஷயத்தை சொல்கிறான்.
  • தீபாவுக்கு ஊட்டி விட்டு அழகு பார்த்த கார்த்திக்.
கார்த்திகை தீபம்: தீபாவுக்கு ஊட்டி விட்டு அழகு பார்த்த கார்த்திக்.. மீனாட்சிக்காக எடுத்த முடிவு! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் கார்த்தியை வேற ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஐஸ்வர்யா, ரியா, ஆனந்த், அருண் ஆகியோர் கூட்டு சேர்ந்து முடிவு எடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

கார்த்திகை தீபம்,  இன்றைய எபிசோடில் (Karthigai Deepam), அதாவது கார்த்திக் தீபாவை அழைத்துக் கொண்டு வெளியே வர ஒரு தள்ளுவண்டி கடையை பார்த்து வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட தீபா நீங்க இந்த மாதிரி கடையில எல்லாம் சாப்பிடுவீங்களா என்று கேட்க நான் அடிக்கடி இந்த கடைக்கு வந்து இருக்கேன் என்று சொல்லி தீபாவை அழைத்துச் செல்கிறான். 

கடைக்காரர் கார்த்திக்கை பார்த்ததும் வாங்க கார்த்திக் சார் என்ன சாப்பாடு இங்க என்று கேட்க கார்த்திக் பேப்பர் ரோஸ்ட் என்று சொன்னதும் தீபாவை பார்த்து இது யாரு புதுசா இருக்காங்க என்று கேட்கிறார். அதன் பிறகு கார்த்திக் இது தீபா என்னுடைய மனைவி என அறிமுகம் செய்து வைக்கிறான். பிறகு தீபாவிடம் உங்களுக்கும் பேப்பர் ரோஸ்ட்டா என்று கேட்க அவளும் ஆமாம் என்று சொல்கிறாள். 

பிறகு கார்த்திக் மற்றும் தீபா இடையே யார் ஆஃபாயிலை உடைக்காமல் சாப்பிடுறாங்கனு பார்க்கலாம் என்று போட்டி நடக்க தீபா எனக்கு அதெல்லாம் சாப்பிடத் தெரியாது என்று சொல்ல கார்த்திக் அவளுக்கு ஊட்டி விடுகிறான். பிறகு டைம் ஆகிவிட்டதால் ஆட்டோ கிடைக்காமல் இருக்க தீபா நடந்தே போகலாம் என்று சொல்லி கூட்டி வருகிறாள். 

மேலும் தீபா எனக்கு குல்பி சாப்பிடணும் என்று சொல்ல குல்பி கடைக்கு கூட்டிச் செல்ல இங்கே எல்லோரும் ஜோடி ஜோடியாக வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்து தீபா புரியாமல் இருக்க எதுக்கு எல்லாம் ஜோடி ஜோடியா இருக்காங்க என்று கேட்கிறாள். இதை பார்த்து அங்கே இருந்தவர்கள் சிரிக்க கடைக்காரர் என்ன சார் நீங்க சொல்றீங்களா இல்ல நான் சொல்லட்டுமா என்று கேட்க கார்த்திக் தீபாவின் காதில் எல்லாரும் லவ்வர்ஸ் என்ற விஷயத்தை சொல்கிறான். 

அடுத்ததாக ரியாவோட உண்மை முகத்தை வெளியே கொண்டு வரணும். ஆனந்த் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள அவ கிட்ட இருந்து விலகி வந்து மீனாட்சி அண்ணியோட சேர்ந்து வாழ்வான். அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். மேடம் கார்த்திக் உங்களோடு வந்தா ஜாலியா இருக்கு ஆனால் இப்படி இரண்டு பேரும் ஒண்ணா வெளிய வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு என பேசுகிறான். 

மேலும் படிக்க | ஓடிடியில் ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | கில்லி படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்! விஜய்யாக நடிக்கும் ஆங்கில ஹீரோ யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News